தமிழ்நாட்டில் இன்று 21,228 பேருக்கு கொரோனா உறுதி.. 144 பேர் உயிரிழப்பு

0 2171

தமிழ்நாட்டில், ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, முதன்முறையாக 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் வகைதொகையின்றி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 21,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று பாதிப்பிலிருந்து, 19,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், இணைநோய் இல்லாத 34 பேர் உட்பட 144 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் 36 பேர், திருவள்ளூர் 12 பேர், வேலூரில் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். நீரிழிவு போன்ற இணை நோய் உள்ள, 110 பேர் பெருந்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அண்மை நாட்களில் இதுவே அதிகமான கொரோனா உயிரிழப்பாகும். மேற்குவங்கத்திலிருந்து வந்த 13 பேர், பீகாரிலிருந்து வந்த 7 பேர் உட்பட வெளிமாநிலங்களிலிருந்து வந்த 34 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை பெருநகரில், மேலும் 6228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1608 பேருக்கும், கோயம்புத்தூரில் 1509 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 1152 பேருக்கும், மதுரையில் 787 பேருக்கும், இராணிப்பேட்டையில் 747 பேருக்கும், திருநெல்வேலியில் 719 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 594 பேருக்கும், ஈரோட்டில் 585 பேருக்கும், கன்னியாகுமரியில் 526 பேருக்கும், திருப்பூரில் 494 பேருக்கும், திருச்சியில் 440 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 790 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஆளாகியுள்ளனர். சுகாதாரத்துறை அறிக்கையின்படி, 1,25,230 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றுமாறு, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறைக் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments