மெட்ரோ ரயில்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி..

0 1112
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வரும் 6 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்களில் 50சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக வரும் 6 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்களில் 50சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாதவர்களிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்களில் குறிக்கப்பட்டுள்ள X குறியீடு இருக்கைகளை தவிர்த்து இடைவெளியுடன் அமர்ந்து பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ள மெட்ரோ நிர்வாகம், ரயில்களில் நின்றபடி பயணம் செய்ய பயணிகளுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments