இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்துவதே ஒரே வழி -ராகுல் காந்தி

0 2705
ஏழை எளிய மக்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கவும் ராகுல் வலியுறுத்தல்

ந்தியாவில் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டுவிட்டரில் இதை தெரிவித்துள்ள அவர், கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் அவதியுறும் மக்களுக்கு குறைந்த பட்ச ஆதார உதவியாக மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பிறப்பித்துள்ள பகுதி நேர ஊரடங்கால் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கடைகளும் அடைக்கப்படுவதால் பொருளாதாரம் முடங்கி ஏழை எளிய மக்கள் அவதியுறுவர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

எனவே இந்த பிரிவினருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments