ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி

0 2550

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஜோஸ் பட்லரின் சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லர் 124 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட் இழந்த வண்ணம் இருந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மணீஷ் பாண்டே 31 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வியை தழுவியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments