கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி.. !

0 2654
கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றி.. !

சென்னை கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளார். 

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இறுதிச்சுற்றில் அவர் 1 லட்சத்து 5 ஆயிரத்து 794 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றியை அடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராமுக்கு 35 ஆயிரத்து 214 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் 70ஆயிரத்து 580 வாக்குகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்குச் மு.க.ஸ்டாலின் சென்றார்.அங்கு ஸ்டாலினுக்கு கொளத்தூர் தொகுதியின் வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஸ்டாலின் வருகையை ஒட்டி லயோலாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து வெற்றிச் சான்றிதழை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் சான்றிதழை சமர்ப்பித்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments