இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு

0 2257

கொரோனா தொற்று பாதித்தோரின் தினசரி எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒரு லட்சத்து 67 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

அதே நேரம் இறப்பு எண்ணிக்கையும் கவலை அளிக்கும் விதமாக இரண்டாயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது. தற்போது இருபத்தொன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் நாடு முழுதும் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 13 கோடியே ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 310 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments