மக்கள் அனைவரும் கவனமாக இருந்தால் முழு ஊரடங்கு தேவையில்லை - பிரதமர் மோடி

0 2598
மக்கள் அனைவரும் கவனமாக இருந்தால் முழு ஊரடங்கு தேவையில்லை - பிரதமர் மோடி

நாட்டு மக்கள் அனைவரும், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தால் முழு ஊரடங்கு தேவையில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரைநிகழ்த்தினார். கொரோனாவின் 2ஆவது அலை நாடு முழுவதும் வீசுவதாக கூறிய பிரதமர், இந்தியா கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை எதிர்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும், ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.

மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 50% நேரடியாக மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்றார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் மாநிலங்களிலேயே தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

நாட்டு மக்கள் அனைவரும் கவனத்துடன் இருந்தால் முழு ஊரடங்கு தேவையில்லை என்று சுட்டிக்காட்டிய பிரதமர், மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதம் தான் முழு ஊரடங்கு என்றும், பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments