வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்தில் நின்ற மர்ம கார் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் புகார்- தேர்தல் அலுவலர்கள் விசாரணை

0 1393
வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்தில் நின்ற மர்ம கார் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் புகார்- தேர்தல் அலுவலர்கள் விசாரணை

திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜமால் முகமது கல்லூரி வளாகத்தினுள் மர்ம கார் ஒன்று நிற்பதாக திமுக வேட்பாளர் இனிகோ இருதய ராஜ் அளித்த புகாரின் பேரில், தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வாக்கு எண்ணிக்கை மையம் முன்பாக பார்வையாளர்கள் காண வைக்கப்படுவதற்காக 50 inch LED தொலைக்காட்சி பெட்டி ஒன்று கார் மூலம் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.

எனினும், கார் ஓட்டுநர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நுழைய உரிய அனுமதி பெறாமல் உள்ளே வந்தது எப்படி என்பது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments