ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

0 4562

கொரோனா பாதிப்பால் நிலவும் மோசமான சூழல் காரணமாக மே 4 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் 10,12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பே தங்களது உச்சபட்ச முன்னுரிமை என்று சிஐஎஸ்சிஇ வாரியம் தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் தேதி ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments