தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயம்..!

0 3456
தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோருக்கு இ-பாஸ் கட்டாயம்..!

கொரோனா 2ம் அலை காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோருக்கு இ - பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. வாழையாறு சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம் மட்டுமின்றி, நடந்து வருவோரிடமும் இ - பாஸ் கேட்கப்படுகிறது.இ - பாஸ் பெறாமல் வருவோர் எல்லையிலேயே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். 20 ஆம் தேதி முதல் இ - பாஸ் உடன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கான சான்றிதழும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments