14 வயது சிறுமியிடம் 22 முதல் 52 வரை அத்துமீறிய அந்த 12... பி.எஸ்.என்.எல் அதிகாரி சிக்கினார்.!

0 37636

நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அருகே 6 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அக்காள் கணவர் தொடங்கி பி.எஸ்.என்.எல் அதிகாரி உள்ளிட்ட 11 பேர் போலீஸ் பிடியில் சிக்கி உள்ளனர். பாலியல் சம்பவத்தை மறைக்க உறவினர்கள் நடத்திய கட்டபஞ்சாயத்து விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் தம்பதியினரின் 14 வயது சிறுமி தனது மூத்த சகோதரி வீட்டில் தங்கி 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டிற்கு திரும்பிய அந்த சிறுமியை 3 மாதங்களுக்கு முன்பு பி.எஸ்.என்.எல் அதிகாரி கண்ணன் என்பவரது வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த பிரவரி மாதம் 19 ந்தேதி சிறுமி உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தங்கள் மகளிடம் விசாரித்த போது அக்காள் கணவர் தன்னிடம் அத்துமீறியதை போலவே பி.எஸ்.என்.எல் அதிகாரியும் அவரது வீட்டில் இருந்த வேலையாட்களும் தன்னை சீரழித்ததாக கூறி அதிரவைத்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். அதிகாரிகள், அந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் கடந்த 4 மாதங்களில் நடந்த பாலியல் கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முதலில் சகோதரி கணவர் சின்ராஜ் என்பவர் சிறுமியிடம் பாலியல் வல்லுறவு செய்ததோடு, அவரது நண்பர்களான எம்ஜிஆர் நகரை சேர்ந்த குமார், வடிவேல், சுந்தரம் உள்ளிட்டோரையும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட அனுமதித்துள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரியவந்ததும், குமார் ஜெயிலுக்கு சென்றால் மூத்த மகள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறி 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து பஞ்சாயத்து பேசி முடித்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து படிப்பை கைவிட்ட சிறுமியை வீட்டு வேலைக்காக பி.எஸ்.என்.எல் அதிகாரி கண்ணன் என்பவர் வீட்டில் சேர்த்து விட்டுள்ளனர். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட கண்ணன், அந்த சிறுமியிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த அவரது வீட்டிற்கு வந்து செல்லும் பணியாளர்களான பன்னீர், மூர்த்தி, அபி, கோபி, நாய் சேகர், சங்கர், சரவணன் ஆகியோரும் தொடர்ந்து மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

சுமார் 50 நாட்களுக்கும் மேலாக தீவிர விசாரனை நடத்திய குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப்பிரியா திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாவதி சம்பவத்தில் தொடர்புடைய பி.எஸ்.என்.எல் அதிகாரி கண்ணன் உள்ளிட்ட 12 பாலியல் அரக்கர்களில் 11 பேரை இரவோடு இரவாக அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி. வருகின்றனர்.

பாலியல் விவகாரத்தில் பஞ்சாயத்து பேசினால் இறுதியில் என்ன மாதிரியான விபரீத சம்பவம் நிகழும் என்பதற்கு இந்த கொடுமையான சம்பவமே சாட்சி.

இதனிடையே வழக்கின் திடீர் திருப்பமாக பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக செயல்பட்டதாக சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை மூத்த சகோதரியிடம் கூறிய நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது கணவன் என்றும் பாராமல் துணிச்சலாக குழந்தைகள் நல அமைப்பில் அவர் புகார் அளித்துள்ளார்.

அடுத்தடுத்து நடந்த விசாரணையில் சிறுமியை சீரழித்த கயவர்களை கைது செய்ததோடு, உடந்தையாக செயல்பட்டதாக சிறுமியின் தாயையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments