உச்சநீதிமன்ற ஊழியர்கள் 44 பேருக்கு கொரோனா: காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை

0 1944

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வீடுகளில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணை மேற்கொண்டனர்.

அந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 44 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இதையடுத்து பாதுகாப்பு கருதி வீடுகளில் இருந்தபடியே நீதிபதிகள் வழக்கு விசாரணையை நடத்தினார்கள். காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

காலை 10.30 மணிக்கு விசாரிக்க வேண்டிய வழக்குகள் 11.30 மணிக்கு விசாரணைக்கு வந்தன. காலை 11 மணி வழக்குகள் மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments