என்ன கொடுமை... லிப்ட் கேட்டு சென்றவர் பெட்ரோலுக்கு பணம் கொடுக்காததால் அடித்துக் கொலை!

0 11828
கைதான சசிக்குமார்

சென்னையில் பெட்ரோல் போட பணம் தர மறுத்ததால், லிப்ட் கேட்டு சென்றவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் வளர்மதி நகர் பகுதியில் சங்கர் என்பவர் கடந்த 4 ஆம் தேதி தலையின் பின்பகுதியில் காயங்களோடு உயிரிழந்து கிடந்தார். சந்தேக மரணமாக பதிவு செய்த கொளத்தூர் போலீசார் வழக்கு குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொளத்தூர் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவரிடத்தில் வளர்மதி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த சங்கர், லிப்ட் கேட்டு சென்றுள்ளார். அப்போது, சசிக்குமார், சங்கரிடத்தில்ர நீங்கள் போகுமிடம் சொல்லுங்கள். அங்கே போய் இறக்கி விடுகிறேன். பெட்ரோலுக்கு மட்டும் 100 தந்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், சங்கரோ தன்னிடத்தில் பணம் இல்லை என்று கூறி மறுத்துள்ளார். இதனால், கோபமடைந்த சசிக்குமார், சங்கரை கீழே தள்ளியுள்ளார். இதில், தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சங்கர் இறந்து போனார்.

ஆனால், சங்கர் இறந்தது தெரியாமல் அவரின் சட்டை பையில் இருந்த 100 எடுத்துக் கொண்டு சசிக்குமார் சென்றுள்ளார். பின்னர், மீண்டும் சங்கர் கிடந்த இடத்துக்கு பல முறை வந்து சசிக்குமார் பார்த்துள்ளார். சங்கர் அப்படியே கிடந்ததால், அங்கிருந்து பைக்கில் சசிக்குமார் தப்பி விட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து, போலீசார் சசிக்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சசிக்குமார் அன்னை சோனியா காந்தி பேரவையின் வடசென்னை மாவட்ட செயலாளராக உள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments