கொரோனா அதிகரித்து வருவதால் அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை...

0 4606
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக நோய்த்தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள தமிழக அரசு, திரையரங்குகள், பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments