சர்ச்சைக்குரிய வகையில் வெங்கடேசப் பெருமாள் வேடம் போட்ட நித்தியானந்தா... பெருமாள் பக்தர்கள் கடும் கண்டனம்

0 13970

அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்திவரும்  நித்தியானந்தாவின் வெங்கடேசப் பெருமாள் வேடம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சங்கு, சக்கரத்துடன், நகைகளை அணிந்து ஒளிரும் கிரீடத்துடன் புகைப்படம் வெளியிட்டிருக்கும் நித்யானந்தா, கைலாசா நாட்டுக்கு வருமாறு தனது பக்தர்களுக்கு அழைப்பு  விடுத்துள்ளார்.  கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாக இ-கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளுமாறும், உலகின் ஒரே இந்து நாடான கைலாசாவை ஆதரிக்குமாறும் அவர் கூறியுள்ளார்.

நித்யானந்தாவின் இந்தப் புகைப்படங்களுக்கு கடுமையான கண்டனங்களும், விமரிசனங்களும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன. பெருமாள் பக்தர்கள் இந்தப் புகைப்படங்களுக்கு தங்களின் கடும் எதிர்ப்பை பதிவிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments