தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.!

0 5314
தமிழகத்தில் இன்று 5441 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 441 ஆக உயர்ந்துள்ளது.

அமீரகத்தில் இருந்து வந்த 3 பேருக்கும்,கத்தாரில் இருந்து வந்த ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆக,வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 28 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெருந்தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 890 பேர் குணமடைந்தனர். சிகிச்சை பலனின்றி, 23 பேர் உயிரிழந்தனர். சென்னை பெருநகரில் 1,752 பேரும், கோயம்புத்தூரில் 473 பேரும். செங்கல்பட்டு மாவட்டத்தில் 465 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments