தமிழகத் தேர்தலில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் வாக்குப்பதிவு

0 1690
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களை விடப் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களை விடப் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.

மாவட்ட வாரியாக ஆண் பெண் வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்துத் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156 ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆண் வாக்காளர்களில் 80 லட்சத்து 32 ஆயிரத்து 495 பேரும், பெண் வாக்காளர்களில் 87 லட்சத்து 76 ஆயிரத்து 376 பேரும் வாக்களிக்கவில்லை. மூன்றாம் பாலினத்தவர்களில் மொத்தமுள்ள 7 ஆயிரத்து 192 வாக்காளர்களில் 1419 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments