இப்கோ உரங்களின் விலை உயர்வு..!

0 976
இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் இப்கோ டிஏபி உரவிலையை 58 விழுக்காடு உயர்த்தியுள்ளது.

இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் இப்கோ டிஏபி உரவிலையை 58 விழுக்காடு உயர்த்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய உர உற்பத்தி நிறுவனமான இப்கோ ஏப்ரல் முதல் நாளில் இருந்து அனைத்து வகை உரங்களின் விலையையும் உயர்த்தியுள்ளது. 50 கிலோ கொண்ட மூட்டை டிஏபி உரத்தின் விலை 1200 ரூபாயில் இருந்து 1900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

என்பிகே வகை உரங்களின் விலையையும் 50 விழுக்காடு உயர்த்தியுள்ளது. யூரியா தவிர மற்ற உரங்கள் அரசின் விலைக் கட்டுப்பாட்டில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்டுள்ளன.

பன்னாட்டுச் சந்தையில் அம்மோனியா, கந்தகம், பொட்டாஷ், டிஏபி ஆகியவற்றின் விலை உயர்வால் மார்ச் மாதத்திலேயே தனியார் நிறுவனங்கள் உரவிலையை உயர்த்தியுள்ளன. அதைத் தொடர்ந்து இப்கோவும் விலையை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments