சொத்துக்காக தந்தையை அடித்து கொன்ற மகன்..

0 1124
தருமபுரி மாவட்டம் சோமனஹள்ளியில் சொத்துக்காக தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

தருமபுரி மாவட்டம் சோமனஹள்ளியில் சொத்துக்காக தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

கூலி தொழிலாளியான அய்யாச்சாமிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் அண்ணாமலை கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், அய்யாச்சாமிக்கு சொந்தமான 30 செண்ட் நிலத்தை தன் பெயருக்கு மாற்றித்தரும்படி தந்தையிடம் அண்ணாமலை தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மதுப்போதையில் மீண்டும் சண்டையிட்டுள்ளார்.

அப்போது தந்தையை அண்ணாமலை பலமாக தாக்கியதில் அய்யாச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் தப்பியோடிய அண்ணாமலையை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments