காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்று விட்டு தப்பிய கணவர்..

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராஜகோபால் - மல்லிகா தம்பதி 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
ராஜகோபால் சலூன் கடையில் வேலை செய்து வரும் நிலையில், மல்லிகா, பொன்ராஜ் என்வரது கேபிள் அலுவலகத்தில் வேலை செய்து வந்துள்ளார். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், புதன்கிழமை மாலை திடீரென கேபிள் அலுவலகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராஜகோபால், மனைவியை சரமாரியாகக் குத்தியுள்ளார்.
தடுக்க வந்த பக்கத்துக்கு வீட்டுப் பெண்ணையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். மல்லிகா உயிரிழந்த நிலையில், பக்கத்து வீட்டுப் பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments