முழுக்கவச உடையில் வந்து வாக்கு செலுத்திய திமுக எம்.பி கனிமொழி

0 6165
முழுக்கவச உடையில் வந்து வாக்கு செலுத்திய திமுக எம்.பி கனிமொழி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, கவச உடையணிந்து வந்து, சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் சென்னை வண்ணாரப்பேட்டையிலும், அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், அம்பத்தூரிலும் கசவ உடையணிந்து வந்து வாக்களித்தனர்.

இதேபோன்று, சென்னையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், நுங்கம்பாக்கம், ராபீன்சன் பூங்கா, மயிலாப்பூர், தியாகராயர் நகர் இந்தி பிரச்சார சபா உள்ளிட்ட வாக்குச்சாவடிகளிலும், திருச்சி, புதுக்கோட்டை, சிங்கம்புணரி, கடலூர் ஆகிய பகுதிகளிலும், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கவச உடையணிந்து வந்து வாக்கு செலுத்தினர். புதுச்சேரியிலும் கொரோனா நோயாளி ஒருவர் வாக்களித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments