ஆபாச வீடியோ விவகாரம் ; பல்லாவரம் வேட்பாளர் வீரலட்சுமி செல்போன் டவரில் ஏறி போராட்டம்!

0 20171
செல்போன் டவரில் ஏறி வீரலட்சுமி போராட்டம்

தனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவரை  கைது செய்யாத காரணத்தினால் பல்லாவரம் தொகுதி மை இந்தியா பார்ட்டி கட்சியின் வேட்பாளர் வீரலட்சுமி சென்னை விமான நிலையத்தின் அருகே செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர் கி.வீரலட்சுமி மை இந்தியா பார்ட்டி சார்பில் போட்டியிடுகிறார். ராமபுரத்தை சேர்ந்த இவருக்கு பம்மலில் தேர்தல் பரப்புரையின் போது ஆபாச வீடியோக்கள் வீரலட்சுமியின் செல்போன் எண்ணுக்கு வந்ததாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் சி.எஸ்.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை மூன்று நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் அவனை தானே கண்டு பிடித்து, நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டி வைத்து பாடம் கற்பிப்பேன் என்று வீடியோ பதிவு ஒன்றையும் சமூக வலைதளத்தில் வீரலட்சுமி பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் , கடந்த 20 நாட்களாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை  கைது செய்யவில்லை. இதனை கண்டித்து சென்னை விமான நிலையம் அருகே உள்ள 100 அடி செல்போன் டவர் மீது ஏறி நின்று ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபரை கைது செய்யும் வரை கீழே இறங்க மாட்டேன் என்று கூறி வீரலட்சுமி தர்ணாவில்  ஈடுபட்டு வருகின்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments