வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்

0 2579

வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், போயஸ் தோட்டம் வேதா இல்லத்தில் சசிகலா வாழ்ந்த காலத்தில் இருவரது பெயர்களும் சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்தன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. எனவே அந்த முகவரியில் இருந்த அனைவரது பெயரையும் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

தற்போது சென்னை தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் சசிகலா வசிக்கும் நிலையில், அந்த முகவரியில் இருந்து வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள அவர் விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments