காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் தப்பியோட முயன்ற தீவிரவாதி கைது..! ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

0 641
காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் தப்பியோட முயன்ற தீவிரவாதி கைது..! அவனிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

காஷ்மீரில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் தப்பியோட முயன்ற தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

ஜாஜர் கோட்லி என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவர்களைக் கண்டதும் தப்பியோட முயன்றவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அவரைச் சோதனையிட்ட போது கைத்துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிபொருட்கள் மற்றும் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர், Islamic State-Jammu and Kashmir என்ற அமைப்பைச் சேர்ந்த மாலிக் உமைத் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments