கள்ளக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் விபத்தில் காயம்... வாக்குச் சேகரித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது விபரீதம்..!

கள்ளக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம், வாக்குச் சேகரித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்.
கள்ளக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம், வாக்குச் சேகரித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்.
அவர் தியாகதுருகத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தனது காரில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது இணைப்பு சாலையிலிருந்து சைக்கிளில் திடீரென ஒருவர் வந்ததால், அவர் மீது மோதாமல் இருக்க, காரை ஓட்டுநர் இடது பக்கம் திருப்பினார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த டிராக்டர் மீது மோதி விபத்துள்ளானது. இதில் காயமடைந்த மணிரத்தினம் உட்பட மூன்று பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Comments