குருகிராம்-துவாரகா விரைவுச் சாலையில் உயர்மட்ட மேம்பாலப் பணியின்போது பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் படுகாயம்

0 1023
குருகிராம்-துவாரகா விரைவுச் சாலையில் உயர்மட்ட மேம்பாலப் பணியின்போது பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் படுகாயம்

டெல்லி அருகே சாலை மேம்பாலப் பணியின்போது பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் மூவர் காயமடைந்தனர்.

டெல்லி துவாரகா - குருகிராம் இடையே விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒருபகுதியாக உயர்மட்ட மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தவுலதாபாத் என்னுமிடத்தில் இரு தூண்களுக்கிடையே கான்கிரீட் பாலத்தைப் பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது.

அப்போது, கான்கிரீட் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் மூவர் காயமடைந்தனர். அவர்களை மற்ற தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments