தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா? - 2 மாதங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 655
அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள், தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என பதிலளிக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள், தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என பதிலளிக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையை சேர்ந்த கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பு, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என ஆய்வு செய்ய கடந்த 2013 ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து  மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து தேர்தல்  முடிவுகள் வெளியான 2 மாதங்களில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments