கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர்... அரசியலில் இது சகஜம்பா..!

0 2891

ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளரும், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் பா.ம.க செல்வாக்கு பெற்ற பகுதியில் கண்ணீர் விட்டு  வாக்கு சேகரித்தார்.

ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளராக இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில், பா.ம.க செல்வாக்கு மிக்க தொகுதியை கூட்டணியில் அதிமுக அமைச்சர் பறித்துக் கொண்டதாக அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி செல்வாக்கு பெற்ற பகுதிக்கு வாக்கு சேகரிக்கச்சென்ற அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ராமதாஸை ஐயா, என்றும் அன்புமணி ராமதாஸை சின்ன அய்யா என்று நா தழு தழுக்க அழைத்ததோடு, தனக்கு வாக்களிக்குமாறு கண்ணீர் விட்டார்.

உடன் இருந்த பா.ம.கவினர் அவருக்கு ஆறுதல் கூறி, தங்கள் வாக்குகளை முழுமையாக தருவதாக, அங்குள்ள கோவிலில் வைத்து சத்தியம் செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments