அட ரோடே இல்லப்பா... விடாமல் துரத்தும் பெண் குரல்... நமக்கு ஒத்துவருமா!

0 3656

’அண்ணே இந்த அட்ரஸீக்கு எப்படி போகனும்’... என தெரு முக்கில் இருக்கும் ஆட்டோ காரர்களிடம் வழி கேட்டு சென்றது அந்தகாலம். இப்போதோ செல்போனை எடுத்து கூகுள் மேப்பில் செல்லும் இடத்தை டைப் செய்தால் போதும், அழகிய பெண்ணின் குரல், தேவையான இடத்தை சென்று சேரும் வரை விடாமல் துரத்தும்.

அண்ணாச்சி கடை முதல், ஊர் பெயர் அறிந்திராத பகுதிகளுக்கு கூட அசால்டாகச் சென்று வர முடிகிறது என்றால், அதற்கு கூகுள் மேப்பின் தயவே காரணம்.

image

 

கூகுள், பல்வேறு சேவைகளைத் தனது செயலி மூலம் வழங்கினாலும், அவ்வப்போது புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கும். மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை வழங்கவே பல அப்டேட்களை வழங்குவதாகத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் தெரிவித்து வருகிறது.

நாம் செல்லும் சாலையில் விபத்துகள் ஏற்பட்டால் அதனை மேப் மூலமாகத் தெரிந்து கொள்ளும் வசதிகளையும் முன்னர் அறிமுகப்படுத்தி இருந்தது. கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் கூகுள் மேப் மூலமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முதலியவற்றை அறிந்துகொள்ளும் வசதிகளையும் வழங்கியது.

இந்த நிலையில் தற்போது புது அப்டேட் ஒன்றை கூகுள் நிறுவனம் வழங்க இருக்கிறது. கூகுள் மேப்பில் “DRAWING” என்ற புதிய ஆப்சன் வரவுள்ளது. இது மைக்ரோசாஃப்ட் பெயிண்ட்டில் உள்ள ”லைன் டூல்” போலவே இருக்கும்.

image

 

இந்த கருவி மூலம் , மிஸ்ஸிங் ரோட் என்றும் ADD Road என்றும் ஆப்சன் வரவுள்ளது. இதன் மூலம் உதாரணத்திற்கு , குக்கிராமங்களில், ஒருவர் செல்ல வேண்டிய சாலை கூகுள் மேப்பில் ஒருவேளை இல்லை என்றால் ADD ஆப்ஷனில் சென்று Drawing டூலை கொண்டு ADD செய்து கொள்ளலாம். பின்னர் அச்சாலைக்கு பெயர் வைத்து Submit செய்ய வேண்டும். அடுத்த 7 நாட்களில் கூகுள் நிறுவனம் அதனை ரிவ்யூ செய்து புது சாலையை அனைவருக்கும் காண்பிக்கும்.

அப்படி புதிதாக ADD செய்யப்படும் சாலை ஒத்தையடி பாதையாக மட்டும் இல்லாமல் நான்கு சக்கர வாகனங்களும் செல்லும் அளவிற்கு இருக்க வேண்டும். இந்த புது ஆப்ஷனை முதலில் 80 நாடுகளில் கூகுள் நிறுவனம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் என்னதான் கூகுள் மேப் மூலம் செல்லும் இடத்திற்கு மிகச்சுலபமாக சென்றடையலாம் என்றாலும், இதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளது. சில நேரங்களில் பலரை கூகுள் மேப் , சுற்றுலில் விட்ட கதைகளும் உண்டு .

image

நம்ம ஊரில் வேலை வெட்டி இல்லாத பலர், கூகுள் மேப்பில் வரவுள்ள இந்த ஆப்ஷனை விளையட்டு தனமாக, ரோடே இல்லாத இடங்களில் ரோடு உள்ளதாக வரைந்து, இல்லாத ரோட்டிற்கு பெயர் வைத்தால் நிலைமை என்னவாகும் என்பது கேள்விக்குறியே. இப்படி பல சிக்கல்களை கடந்து , புதிய ஆப்ஷன் கொண்ட கூகுள் மேப், இந்தியாவிலும் நடைமுறைக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

image

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments