நாட்டில் எந்த மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு விளக்கம்

0 1141
நாட்டில் எந்த மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு விளக்கம்

ந்த மாநிலத்திலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ராஜஸ்தானில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக அந்த மாநில அரசு கூறியிருந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், ‘தடுப்பூசி இருப்பு, பயன்பாடு குறித்த தரவுகள் மாநிலங்களிடம் இருந்து வந்துள்ளன என்றார்.

மத்திய அரசு மக்களுக்கு தடுப்பூசி போடவில்லை என்றும், அரசு மையங்களில் இலவசமாகவும், தனியார் மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் தடுப்பூசி கிடைப்பதை மட்டுமே அரசு உறுதி செய்கிறது’ என்றும் அவர் கூறினார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வரை நடத்தப்பட்ட ஆய்வில் எந்த மாநிலத்திலும் தட்டுப்பாடு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments