”இந்தியாவின் சாதனைகளால் உலகமே பயன் அடையும்” -பிரதமர் மோடி

0 1422
”இந்தியாவின் சாதனைகளால் உலகமே பயன் அடையும்” -பிரதமர் மோடி

ந்தியாவின் சாதனைகள் நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகிற்கும் பயன் அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி வருகிறது. இதையொட்டி, 75-வது சுதந்திர தினவிழா ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் 75 இடங்களில் 75 வாரங்கள் கொண்டாடப்படுகிறது.

இதன் தொடக்கவிழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், 75 வாரங்களுக்கு சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றார். கொரொனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

இந்த சாதனையால் நாடு மட்டுமல்ல , உலகமே பயன் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். தண்டி யாத்திரையின் நினைவு தினமான இன்று அதை நினைவு கூரும் வகையில் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து 81 பேர் தண்டிக்கு யாத்திரையாக புறப்பட்டனர். இதையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments