நாட்டிலேயே முதன் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் திருநங்கைகள் சமூக மேடை..!

0 1442
நாட்டிலேயே முதன் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் திருநங்கைகள் சமூக மேடை..!

நாட்டிலே முதன் முறையாக தெலுங்கானாவின் சைபராபாத் காவல் நிலையத்தில் ”திருநங்கைகள் சமூக மேடையை” காவல் ஆணையர் வி.சி.சஜ்ஜனர் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், திருநங்கைகள் மத்தியில் உள்ள அனைத்து குறைகளை நிவர்த்தி செய்யும் மையப்புள்ளியாக இம்மேடை இருக்கும் என்றார்.

அவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடு தொடர்பான குற்றங்களை தடுக்க இம்மேடை உதவிடும் எனக் கூறிய அவர், சட்ட உதவி, வாழ்க்கைத் திறன், திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிற சேவைகளையும் வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments