திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் இன்றுடன் நிறைவு..! வரும் 10ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட தீவிரம்

0 1753
திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்காணல் இன்றுடன் நிறைவு..! வரும் 10ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட தீவிரம்

திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 5ஆவது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது. கடைசி நாளான இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து 5-வது நாளான விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தோருக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் நேர்காணலில், தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

நேர்காணலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

அதேபோன்று, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு விருப்ப மனு அளித்த உதயநிதி ஸ்டாலினிடம், மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments