தென் தமிழக மாவட்டத்தில் வருகிற 6-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

0 3022
வருகிற 6-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும்

வருகிற 6-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், 5-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது. வருகிற 6, 7, 8 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டம்  இன்றி தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments