மணல் கடத்தலை தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

0 898

ணல் கடத்தலை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் சட்ட விரோத மணல் கடத்தலை தடுப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. சட்டவிரோத மணல் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கைகள், எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதனடிப்படையில் தலைமைச் செயலாளர் 4 வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments