சட்டமன்றத்தில் 3 தலைவர்களின் திருவுருவப் படங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்

0 2281

தமிழக சட்டப்பேரவையில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, முன்னாள் முதலமைச்சர்கள் ப.சுப்பராயன், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆகிய 3 தலைவர்களின், திருவுருவ படங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தலைவர்களது திரு உருவப் படங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதன்மூலம், சட்டப்பேரவையை அலங்கரிக்கும் தலைவர்களது உருவப் படங்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. விழாவில், வ.உ.சி, ஓமந்தூர் இராமசாமி, ப.சுப்பராயன் ஆகியோரது வாரிசுகளுக்கு, பொன்னாடை அணிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கெளரவித்தார். நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments