டெஸ்லா நிறுவன பங்குகள் 8.6 சதவிகிதம் வீழ்ச்சி : ஒரே நாளில் ரூ.1.11 லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவன பங்குகள் 8.6 சதவிகிதம் வீழ்ச்சி : ஒரே நாளில் ரூ.1.11 லட்சம் கோடியை இழந்த எலான் மஸ்க்
உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் பங்குகள் 8.6 சதவிகிதம் சரிவை சந்தித்ததால், அதன் உரிமையாளர் எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.
சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பிட்காயின் மதிப்பை டெஸ்லாவின் சொத்து மதிப்பில் வரவு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இவற்றின் காரணமாக டெஸ்லாவின் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்து முதலீட்டை திரும்ப பெறுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தில் அவரால் 6 வாரங்கள் மட்டுமே நீடிக்க முடிந்துள்ளது.
13 லட்சத்து 50 ஆயிரம் கோடியுடன் இரண்டாம் இடத்திற்கு அவர் சென்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ், 13 லட்சத்து 60 ஆயிரம் கோடியுடன் முதலிடத்திற்கு மீண்டும் வந்துள்ளார்.
Comments