பாமக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு: இன்று முதல் விநியோகம்

0 1320
பாமக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு: இன்று முதல் விநியோகம்

வருகிற சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.

சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள அக்கட்சியின் மண்டல அலுவலகத்தில் இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 26-ம் தேதி மாலை 5 மணிக்குள் மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் 10 ஆயிரம் ரூபாயும், தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் 5 ஆயிரம் ரூபாயும், போட்டியிட விரும்பும் பெண்கள் 5 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments