மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை: குற்றாலம் மெயினருவியில் 2வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

0 5712

தென்காசியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பரவலாகப் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயினருவியில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள செங்கோட்டை, கடையநல்லூர், புளியரைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்ததோடு குற்றாலம் மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேலும் மழையின் காரணமாக அங்கு பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி தண்ணீர் கொட்டிய நிலையில், சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று விதிக்கப்பட்டிருந்த தடை இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments