மகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு

0 1303
மகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு

மகாராஷ்டிராவில் 3 மாதங்களுக்குப் பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

அகோலா, புனே, மும்பையின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 112 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் மகாராஷ்டிராவில் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருவதால் சில பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments