இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி..!

0 5758
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டவது டெஸ்ட் கிர்க்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 195 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் சேர்ந்தது. அதிகபட்சமாக அஸ்வின் 106 ரன்கள் எடுத்தார்

இதனையடுத்து 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் முடிவடைந்தது. 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அக்சார் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் மூலம் 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரை 1 க்கு1 என்ற கணக்கில் சமன் செய்தது. இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி தக்க வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments