தமிழகத்தில் வெகுவேகமாக குறையும் கொரோனா..! 23 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு பதிவு

தமிழகத்தில் புதிதாக, 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 503 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தமிழகத்தில் புதிதாக, 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 503 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சென்னை, மதுரை, கடலூரில் தலா ஒருவர் வீதம் மொத்தம் 3 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியானார்கள், சென்னையில் 156 பேர், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 417 பேர், சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
23 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவானதாக குறிப்பிட்டு உள்ள தமிழக சுகாதாரத்துறை, பெரம்பலூர் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக நீடிப்பதாக தெரிவித்துள்ளது.
Comments