லக்னோ விமானநிலையத்தில் தர்ணா போராட்டம் நடத்திய மோடியின் சகோதரர்

பிரதமர் மோடியின் சகோதரர் Prahlad மோடி லக்னோ விமான நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக பேசிய லக்னோ விமானநிலைய மூத்த அதிகாரி, நேற்று மாலை 4 மணி அளவில் மோடியின் சகோதரர் இண்டிகோ விமானம் மூலம் லக்னோ வந்தார் என்றார்.
பின்னர் அவர் தன்னுடைய ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார் என்றார்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மூத்த அதிகாரிகள் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பயனும் இல்லை என்றும் தெரிவித்தார்.
Comments