நாடாளுமன்றத்தில் நாளை பட்ஜெட் தாக்கல்..! கொரோனாவுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் ஆகும் நிலையில், Union Budget Mobile App என்ற செயலி அறிமுகம்

0 2070
நாடாளுமன்றத்தில் நாளை பட்ஜெட் தாக்கல்..! கொரோனாவுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் ஆகும் நிலையில், Union Budget Mobile App என்ற செயலி அறிமுகம்

த்திய பட்ஜெட் நாளை திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த 29-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், நாளை காலை 11 மணி வாக்கில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளும், வரிக்குறைப்புகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் முழு அளவிலான பட்ஜெட் இதுவாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் நிதிநிலை அறிக்கையை எளிய முறையில் பெற Union Budget Mobile App என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments