100 சதவீதம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர்

100 சதவீதம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது பெரம்பலூர்
தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவல், வெகுவேகமாக குறைந்து வருகிறது. புதிதாக, 665 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
826 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், சென்னை மற்றும் வேலூர் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சென்னையில் ஒரே நாளில் 195 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, சிகிச்சையில் கூட வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது என்பதால், 100 சதவீதம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments