பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
வருகிற 19-ம் தேதி முதல் 10,12 - ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைப்பு குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கு அருகாமையில் இருக்கக் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், மதிய உணவுத் திட்டத்தை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுதிகளில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா எனக் கண்காணிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 மல்ட்டி விட்டமின் மற்றும் 10 ஜிங்க் மாத்திரைகள் வழங்கவும், 18-ம் தேதிக்குள் மாணவர்களின் வருகையை பொறுத்து அந்தந்த பள்ளிகளுக்கு மாத்திரைகளை விநியோகம் செய்யவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Comments