தமிழக மீனவர்கள் 26 பேரை எச்சரிக்கையுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு

0 930
தமிழக மீனவர்கள் 26 பேரை எச்சரிக்கையுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் கடலில் மீன்பிடித்தபோது எல்லைத் தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் 26 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். இதில் 22 பேர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதர நான்கு பேர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீண்டும் எல்லைத் தாண்டினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீனவர்களின் நான்கு விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவற்றை விடுவிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments