சீனா ஆன்லைன் கந்துவட்டி செயலி விவகாரத்தில் பிடிபட்ட சீனர்கள், சீனாவிற்கு உளவு வேலை பார்த்தார்களா?

0 1190

சீனா ஆன்லைன் கந்துவட்டி செயலி விவகாரத்தில் பிடிபட்ட சீனர்கள், சீனாவிற்கு உளவு வேலை பார்த்தார்களா என மத்திய உளவுத்துறை மற்றும் "ரா" அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் சீன மொழி பெயர்ப்பாளர்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கந்துவட்டி ஆன்லைன் செயலிகளை பதிவிறக்கம் செய்பவர்களின் தனிப்பட்ட தகவல்களை 46 சாப்ட்வேர்கள் மூலம் திருடியது தெரிய வந்துள்ளது.

இதில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதா? என அமலாக்கத்துறை விசாரணையை துவங்கியுள்ள நிலையில், மத்திய உளவுத் துறை மற்றும் RAW அதிகாரிகள்  களமிறங்கியுள்ளனர். லட்சக்கணக்கான இந்தியர்களின் தகவல்கள் சீனாவிற்கு அனுப்பப்பட்டதா?, சதி வேலைகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் பறிமாற்றமா? என்ற ஐயமும் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments