மாணவியோடு திருமணம் ஆனது போல் போலிச் சான்றிதழ் தயாரித்து மிரட்டி வந்த பேராசிரியர் கைது

0 18169

சென்னையில் கல்லூரி மாணவிக்கும் தனக்கும் திருமணம் ஆனது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து, மிரட்டி வந்த உதவி பேராசிரியர் கைது செய்யப்பட்டான். விருகம்பாக்கத்திலுள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவன் சதீஷ்குமார்.

ஏற்கனவே திருமணம் ஆன சதீஷ்குமார், தன்னிடம் பயிலும் மாணவிக்கும், அவனுக்கும் திருமணம் ஆனது போன்று போலியாக சான்றிதழ் தயாரித்ததோடு, தன்னை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால், இந்த சான்றிதழை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகின்றது.

இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் உதவிப்பேராசிரியர் சதீஷ்குமாரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments