10, 12-ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது ? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

0 49624
10, 12-ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது ? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

விரைவில் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பது குறித்து பரிசீலனை நடைபெறுவதாக  அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், 98 சதவிகித பெற்றோர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்றார்.

முதல் கட்டமாக 10, 12 ம் வகுப்புகள் 6029 பள்ளிகளில் திறக்கப்பட உள்ளதாக அவர் கூறினார். இனி படிப்படியாக எந்தெந்த வகுப்புகளை தொடங்கலாம் என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments